வணக்கம் அன்பு சொந்தங்களே !!!
சமீப காலமாக நம் சமுதாயத்தில் நாம் சந்தித்து வரும் சமுதாய பின்னடைவுகளும், மோசமான வெட்கப்பட கூடிய அவலநிலைகளும், சமுதாய சீர்ழிவுகளும், நிகழ்ந்த வண்ணம் உள்ளது. நம் இன மக்களின் ஏக்கங்களையும், துன்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, தமிழகத்திலுள்ள நம் இனசங்கங்களை ஆலோசித்ததில் எவ்வித பலனும் கிடைக்காததால், நம்மின மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சமூக இடர்பாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், பாடுபட ஓர் அமைப்பு வேண்டும் என்று தீர்வுகண்டு அதன்படி எவ்வித அரசியல் பின்னணியோ, எந்தவித அரசியல் லாபத்திற்காகவோ, எவ்வித சுயநலமோ மற்றும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, முன்மாதிரியான நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்று தோற்றுவிக்கப்பட்டது தான் இப்பேரவை.
-
அரசியல் சார்பற்றது.
-
சமூக உலகளாவிய ஒருங்கிணைப்பிற்காக அயராது பாடுபடும்.
-
இயன்ற சேவையை சமூகத்திற்கு அர்ப்பணிக்கும்.
-
சமூக உரிமையை பெறுவதற்கும் நிலைநாட்டுவதற்கும் பாடுபடும்.
-
சமூக “சமாதான மற்றும் சீர்திருத்தக் குழு” மூலம் சமூக இடர்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க ஆவண செய்யும்.