நோக்கங்கள்

1. மாநிலம் முழுவதிலும் உள்ள நம் இனத்தோரை ஒருங்கிணைத்தல். ஒருவருக்கொருவர் அறிமுகம் கிடைக்குமாறு ஆவணச் செய்தல் .

2.  ஏழை  மாணவ செல்வங்களுக்கு இயன்ற கல்வி உதவிகளை நல்கும் .

3. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு விபரங்களையும், வழிகாட்டுதல்களையும் மற்றும்  நல் ஆலோசனைகளையும் நல்கும்

4. சமுதாயத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான மணமாலை விபரங்களையும் அவ்வப்போது பேரவையின் இணையதளத்திலே தெரிவித்து உலகளாவிய இலவச சேவையை என்றும் போல் நடைமுறைப்படுத்தி நம் இனமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடும் .

5.முக்கிய சமுதாய நிகழ்வுகள், விபரங்கள், எதிர்கொள்ளவிருக்கும் சமுதாய பிரச்சனைகள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அவ்வப்போது சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டுவரும் .

6. நம் இன சங்கங்கள் மற்றும் நம் இன மக்களிடையே நிலவும் வேற்றுமையை அகற்றி ஆங்காங்குள்ள சிறு சிறு பிரச்சனைகளை களையவும், சீர்செய்யவும் , சமூகம் மேம்பட இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் , ஒத்துழைப்பையும் ஆதரவை நல்கும்.

7. தமிழ்நாட்டிலே உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை அமைத்து, அனைத்து கிளைசங்ககளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல்.

8. கல்விக்கூடங்கள் தொடங்க தம்மால் இயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் செய்துவரும்.