1. கல்யாண மண்டபம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது

நமது இன மக்களுக்கு ஓர் நற்செய்தி நம் 24மனை தெலுங்கு செட்டியார் இனத்திற்கே பெருமை சேரும் வகையில் சென்னை முகப்பேர் சேர்ந்த தொழிலதிபர் திரு.நாச்சிபட்டி சங்கர் அவர்கள் சென்னை மயிலாப்பூர் டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தை கொரோணா சிகிச்சை மையமாக மாற்றி உள்ளார்.
இது எல்லோரும் செய்வது போல் இல்லாமல் புதுவிதமாக உள்ளது என்னவென்றால் இங்கு டிவி வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கேரம் செஸ் யோகாசனம் தியானம் மற்றும் பெண்களுக்கு தாயம் பல்லாங்குழி விளையாட்டு உள்ளது.
இங்கு வருபவர்கள் தங்கள் மாற்று துணி மட்டும் கொண்டு வந்தால் போதும்.
மூன்று வேளையும் சாப்பிட்டு இலவசம். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை அனைத்தும் இலவசம்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நம் இன மக்களும் மற்றவர்களும் இந்த உதவி தேவைபடுவோர் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இதைப்போல மற்ற ஊர்களிலும் விரைவில் தொடங்கப்படும்.
இதில் பங்குகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 7358580572
ஐயா திரு.நாச்சிபட்டி சங்கர் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
ஐயாவின் திருத்தொண்டு மேலும் மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏2. RK நகர் வேட்பாளராக இருந்த டாக்டர் P.காளிதாஸ் அவர்கள் காலமானார்

கண்ணீர் அஞ்சலி.
அரிதினும் அரிது,
கல்வியும் ஞானமும் நயத்தல் அரிது.
தேர்ந்த கல்வி, ஞானம் எய்தி
மருத்துவர் எனும் நிலையை எட்டுதல் மிகவும் அரிது. அந்த அரிதினும் அரிதான மருத்துவ முதுநிலை பட்டம் எய்தி இன்னும் பல்லாண்டு வாழ வேண்டிய டாக்டர் காளிதாஸ் இன்று இல்லை என்பது 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
கழக மருத்துவரணி துணை தலைவரும்
RK நகர் வேட்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
அன்னாரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்😭 தெரிவித்துக் கொள்கிறோம்
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்🙏