மாநாடு – விபரங்கள்

வருடம்இடம் தலைமைமாநாடு
1919கோவை திரு V.B.வெங்கட்ராமன் செட்டியார் 1 வது மாநாடு
1923காஞ்சிபுரம்திரு C.K.பழனிசாமி செட்டியார் 2வது மாநாடு
1941விருதுநகர்திரு T.தனுஷ்கோடி செட்டியார் 3 வது மாநாடு
1951பர்கூரில்திரு S.M.S.சொக்கலிங்கம் செட்டியார் 4 வது மாநாடு
1962பழனி திரு வெ.சொக்கலிங்கம் செட்டியார் 5 வது மாநாடு
1977திருவாங்கம் திரு T.A.சக்கரய்யா செட்டியார் 6 வது மாநாடு
1983சென்னைதிரு K.P.ஜெகநாதன் செட்டியார் 7 வது மாநாடு
1987திருச்சிதிரு K.S.முத்துக்காளி செட்டியார் 8 வது மாநாடு
1989பழனிதிரு K.S.முத்துக்காளி செட்டியார் 9 வது மாநாடு

2015

திண்டுக்கல்
திரு T.பாலகிருஷ்ணன் செட்டியார்
திரு K.C.பழனிசாமி செட்டியார்
திரு R.நடராஜ் செட்டியார்


10 வது மாநாடு

முக்கிய விபரம்

மாநாடு (மகாநாடு)

மாநாடு என்பது தேசம் அல்லது மாநிலம் முழுவதும் உள்ள நம் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சமுதாயத்தின் ஒற்றுமை , ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பு இவற்றை பறைசாற்றும் விதமாக நடத்தப்படும் மாபெரும் சமுதாய பெரும் திருவிழா இவ்விழாவை பொறுப்பேற்று நடத்த கடமைப்பட்டது நம் தலைமை சங்கம்(இது நூறு வருட பழமையானது). நம் தலைமை சங்கம் , தமிழ்நாடு , ஆந்திர ,கர்நாடகா மற்றும் கேரளா அனைத்து ஊர்களிலும் உள்ள நம் சமுதாய கிளைசங்கங்கள் , கிராம சங்கங்கள், ஊர் சங்கங்கள்,சமுதாய பேரவை மற்றும் இது போன்ற சமுதாய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 5 , 10, 15 அல்லது 20 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிரமாண்ட பெருவிழா. இவ்விழாவில் சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு , சமுதாய நலம், முன்னேற்றம் , ஏழை எளியோரின் வாழ்வாதாரம் , கல்விமேம்பாடு , அரசிடம் இருந்து சமுதாய உரிமைகள் பெறுதல் போன்ற உயரிய நோக்கங்களை நிறைவேற்றிட பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் தீர்மானிக்கபடும். மேலும் நம்சமுதாய மக்கள் ஒரு முக்கிய விவரத்தை புரிந்து கொள்ள வேண்டும் .சென்ற பத்தாவது சமுதாய மாநாடு , நம் தலைமை சங்கம் மூலம் திண்டுகல்லில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது . நம் சமுதாய பெரியவர் ஒருவர் தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும், சுய பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மற்றொரு மாநாட்டை மதுரையில் ஒரு மாத இடைவெளியில் நடத்தியத்தின் மூலம், நம் சமுதாயத்தில் பிரிவினையை உருவாக்கி மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்துவிட்டார். இத்தகைய தவறான செயல்கள் நம் பெரியவர்கள் ஆமோதித்தாதலும் இச்செயலை தடுக்காமல் புறக்கணித்து ஒதுங்கி சென்றதன் மூலமாகவும் இத்தகைய தவறான செயல் ,பிரிவினையை ஊக்குவிக்கும் செயல் ஒற்றுமையையும் , ஒருமைப்பாட்டையும் குலைக்கும் செயலானது அரங்கேற்றப்பட்டது.

இனிவரும் காலங்களில் இத்தகைய மோசமான ஒருமைப்பாட்டை குலைக்கும் தவறான நிகழ்வுகள் அரங்கேறா வண்ணம் பாதுகாப்பது நம் சமுதாயத்தினர் அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும் .